A Scientific Explanation for Ghosts?

Are you hearing weird sounds, briefly seeing ghostly images, feel a presence in the room with you, or an inexplicable and sudden sense of overwhelming fear?

Marriage: God’s Gift to Humanity

A couple is able to fully give love and devotion to each other, raise healthy children who are fully secure in having both a loving father and mother Marriage is an exclusive right given to human beings.

Maths is a Problem? The Solution for all types of Maths in a Second.

Maths becomes the hardest subject to many people, interestingly even some Maths Teachers troubles to get Answered, Now that problem is Solved. Now you can get your questions answered in seconds...

Can We Breath Other Gasses Mixed With Oxygen?

A s you may or may not know, oxygen is only second most abundant gas in what we call ‘air’. Nitrogen takes the top spot, accounting for ...

BOSTON BOMBING UPDATE: THE BACKPACK MYSTERY-CONSPIRACY!!!!

Someone framed them, I don't know who exactly did it. They cowards they shot the boy dead, there are cops like this. Those are my kids, you know, I am afraid for my other boy, may be he will be shot dead too. They should arrest him, may be bring him but alive, alive. Justice should decide who is right and who is guilty.

Saturday, June 29, 2013

மதிப்புத் தோற்றமா? மார்க்க விளக்கமா?-- Usthaz R.Hajjul Akbar

சமூகத்தில் அவ்வப்போது சிலர் தோன்றுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தாம் ஏதோவொரு உதிப்பையோ ஞானத்தையோ கராமத்தையோ பெற்றதாக மக்களை நம்பவைக்கிறார்கள். அவ்வாறு தாம் பெற்றுள்ளதை பிறர் நம்பும் வகையிலான கதைகள்﹐ சம்பவங்கள் போன்றவற்றையும் கூறுகிறார்கள்.
இத்தகைய கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் குர்ஆன்ஸுன்னாவுக்கு இல்லாத மரியாதையும் மதிப்பும் மக்களிடம் கிடைத்து விடுகின்றது. அதன் பின்னர் இவர்கள் கூறுவதெல்லாம் மக்களிடம் மார்க்கமாகி விடுகின்றன. இனி அவர்களைப் பின்பற்றவென ஒரு கூட்டமும் உருவாகி விடுகின்றது. நாளடைவில் இவ்வாறானவர்கள் பெரும் மகான்களாக மாறிவிடுகின்றனர். அவர்களது பேச்சை மறுத்துப் பேச யாரும் துணிவதில்லை. அவர்கள் சொன்னவை வேத வாக்குகளாகி விடுகின்றன. அவர்கள் தடுத்தவை மீறக்கூடாத வரம்புகளாகி விடுகின்றன. அவற்றுக்கும் குர்ஆன்ஸுன்னாவிற்கும் எத்துணை இடைவெளி அல்லது முரண்பாடுகள் இருந்தபோதிலும் சரியே.
பொதுவாக இவ்வாறுதான் மதங்களின் பெயரால் தங்களைச் சூழ ஒரு மதிப்புத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு மகான்களாகவும் சாமியார்களாகவும் பக்தர்களாகவும் மக்கள் மத்தியில் சிலர் இடம்பிடித்து விடுகின்றனர். அவர்களது திறமைகளுக்கும் கைவரிசைகளுக்குமேற்ப சிலர் நீண்டகாலம் தங்கள் மீதுள்ள மதிப்புத் தோற்றத்தைப் பாதுகாத்துவருகின்றனர். சாணக்கியம் குறைந்தவர்கள் அந்த மதிப்புத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடம் புரண்டு தங்களது போலி முகத்தை அம்பலப்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் நீண்ட காலம் நின்றுபிடித்தார்களோ இல்லையோ. இத்தகையவர்களால் காலத்துக்குக் காலம் மக்கள் கூட்டமொன்று தவறான வழியில் சென்று விடுகின்றது. அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் முன்னரே அவர்கள் வெகுதூரம் சென்று விடுகின்றனர்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய உதாரணம் இந்த உண்மைக்கு சாலப் பொருந்துவதாக உள்ளது.
விளக்கில் முட்டி நெருப்பில் கரிந்து சாவைத் தழுவும் வீட்டில் பூச்சிகள்தான் அந்த உதாரணம். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள். ''நான் முடியுமானவரை அந்த விட்டில்களைத் தடுக்கிறேன். எனினும்அவைகள் என்னையும் மீறி நெருப்பில் மோதி அழிந்து விடுகின்றன.
இத்தகைய போலி பக்தர்கள் உருவாவதற்கு என்ன காரணம்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் கூறுவதெல்லாம் உண்மையா?
இவர்கள் ஒரு நேர்கோட்டில் பயணத்தை ஆரம்பித்தவர்கள்தாம். இவர்கள் பற்றிய மக்கள் அபிப்பிராயமும் ஆரம்பத்தில் நல்லதாகவே இருந்திருக்கும். மக்கள் நம்பும் நல்ல மனிதர்கள்தாம் பின்னர் மக்களைத் தவறான திசையில் வழிநடத்தி விடுகிறார்கள் என்பது எத்துனை கொடுமை. இது மக்களுக்கும் புரிவதில்லை. மக்களை ஏமாற்றுபவர்களுக்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விட மனமில்லை.
சமூகத்தைப் பிழையான திசையில் வழிநடத்துகின்ற இத்தகையவர்கள் எங்கோ ஓரிடத்தில் நெறி பிறழ ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் நெறிபிறழ்ந்த இடம்நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு அதிசயமான சம்பவமாக இருக்கலாம். அல்லது ஒரு உதிப்புஞானம்விசித்திரம் என ஏதொவொன்றாக இருக்கலாம் இவ்வாறு ஏதோவொன்று அவர்களது வாழ்க்கையில் நடைபெற்றவுடன் அவர்கள் ஏனைய மனிதர்களைவிட தங்களுக்குள் ஏதோவொரு விஷேடம் இருப்பதாக உணர ஆரம்பிக்கின்றனர்.  நடைபெற்ற அதிசயத்தை அடிப்படையாகக் கொண்டு தங்களைச் சூழ ஒரு மதிப்புத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறானதொரு சம்பவத்தை அல்லாஹ் குர்ஆனிலும் குறிப்பிடுகின்றான். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வைத் தரிசிக்கச் சென்றிருந்தவேளை சாமிரி என்பவன் ஒரு காளைக் கன்றை உருவாக்கி அதனை வணங்குமாறு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமூகத்தைப் பணித்தான். அவர்களும் அதனை வணங்கினார்கள். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் திரும்பி வந்து அது பற்றி சாமிரியிடம் கேட்டபோது அவன் அளித்த பதில் இந்த உண்மையை உணர்த்துவதாக உள்ளது:
''இவர்களுக்குத் தென்படாத ஒன்றை நான் கண்டேன். தூதர் (ஜிப்ரில்) இன் காலடியில் இருந்து நான் ஒரு பிடி மண்ணை எடுத்து அதனை (காளைக் கன்றை செய்வதற்காக தயார்செய்திருந்த பதார்த்தங்களில்) எறிந்தேன். இவ்வாறு செய்யும்படியே என் மனம் என்னைத் தூண்டியது.''
பின்னர் சாமிரி காளை மாட்டின் குரலைப் போன்று ஓசை வெளியாரும் ஒரு காளைக் கன்றின் சிலையை அசச்சமூகத்திற்குச் செய்து கொடுத்தான். அவர்கள் அதனை வணங்கினார்கள்.

Saturday, June 1, 2013

எது சக்தி? எது ஆற்றல்?


எது சக்தி?

எது ஆற்றல்?

இந்த ஷரீஅத் கோழைகளுக்காக அருளப்பட்டதல்ல..!

மனஇச்சைகளுக்கு அடிமையானவர்களுக்கும் உலக சொகுசுகளின் பின்னால் அலைபவர்களுக்கும் இந்த மார்க்கம் அருளப்படவில்லை...!

காற்று வீசுகின்ற திசையில் பறக்கின்ற தூசு தும்புகளுக்காக...

தண்ணீர் போகின்ற போக்கில் அடித்துச் செல்லப்படுகின்ற சக்கைகளுக்காக...

எந்த நிறத்தையும் பூசிக் கொள்கின்ற நிறம் இல்லாதவர்களுக்காக...

Related Posts Plugin for WordPress, Blogger...